வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (20:59 IST)

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழா.! கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடக்கம்..!!

Velanganni
வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய திருவிழா ஆண்டுதோறும்  10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான வேளாங்கண்ணி பேராலய திருவிழா இன்று (ஆகஸ்ட் 29) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 
தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் சகாயராஜ், கொடியை புனிதம் செய்து கொடியேற்றி, பெருவிழாவைத் தொடங்கி வைத்தார். கொடியேற்றத்தின் போது பலுன்கள், புறாக்கள் பறக்கவிடப்பட்டன. 
 
இந்த கொடியேற்ற நிகழ்வில் சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். இந்த திருவிழா செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  

 
கொடியேற்றத்தை முன்னிட்டு பல்வேறு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.