1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TNPSC group 2 and group 2a exam hall ticket

குரூப்2, குரூப் 2ஏ ஹால் டிக்கெட் வெளியீடு.. எந்த இணையதளத்தில் டவுன்லோடு செய்யலாம்?

TNPSC Exam
இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியாகி உள்ள நிலையில் இந்த ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்யும் இணையதளம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

குரூப் 2, குரூப் 2ஏ பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்ப செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்வுக்கு 7.93 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுக்களை https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ==  என்ற இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 பிரிவில் 507 இடங்கள், குரூப் 2 ஏ பிரிவில் 1820 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்த பணிகளுக்கு தேர்வு   முதன்மைத் தேர்வு, அப்ஜெக்டிவ்  முறையில் தேர்வு நடத்தப்பட உள்ளது.

குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வும்  நடைபெற உள்ளது. செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ள இந்தத் தேர்வுக்கு 7.93 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,.

Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
எலான் மஸ்க்கை சந்திக்கும் மு.க.ஸ்டாலின்! AI படத்தை பகிர்ந்து வெங்கட்பிரபு போட்ட ட்வீட்!