வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 26 செப்டம்பர் 2024 (17:35 IST)

பீகாரில் புனித நீராடும் திருவிழா: கூட்ட நெரிசலில் 37 குழந்தைகள் உள்பட 43 பேர் உயிரிழப்பு

பீகாரில் நடந்த புனித நீராடல் திருவிழாவில் 43 பேர் உயிரிழந்ததாகவும், இதில் 37 பேர் குழந்தைகள் என கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாக்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக விரதம் இருந்து கொண்டாடும் பண்டிகை ஜிவித்புத்ரிகா. இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் பீகார், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் நிலையில், நேற்று இந்த பண்டிகை பீகாரில் கொண்டாடப்பட்டது.

இதற்காக அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுடன் ஆற்றில் புனித நீராடும் நிகழ்வு நடந்து கொண்டிருந்த நிலையில், திடீரென நீரில் சிலர் மூழ்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில்  43 பேர் உயிரிழந்ததாகவும், இதில் 37 பேர் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் 3 பேர் காணாமல் போய் உள்ளதாகவும், அவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் இருப்பதாக பீகார் அரசு கூறியுள்ளது. இதுவரை 43 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது என்று பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பீகார் முதல்வர் நிதீஷ் குமார் 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva