தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாட்டு தர வேண்டிய நிதியை நிறுத்திய மத்திய அரசு: TNPSC தேர்வில் இப்படி ஒரு கேள்வி..!
- சின்னத்திரை நடிகர் சங்கம்.. தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றவர் யார்?
- டிகிரி இருந்தா போதும்.. கூட்டுறவு சங்கங்களில் 2000 உதவியாளர் வேலை! - உடனே அப்ளை பண்ணுங்க!
- குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஈபிஎஸ் கோரிக்கையால் அதிர்ச்சியில் தேர்வு எழுதியவர்கள்!
- 5 மாநில இடைத்தேர்தல்: ஒரே ஒரு தொகுதியில் மட்டும் பாஜக முன்னிலை..!
TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. முதன்மை தேர்வு தேதியும் அறிவிப்பு..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட 70 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வு விவரங்கள்
காலிப்பணியிடங்கள்: 70
தேர்வு தேதி: ஜூன் 15
அனுமதிக்கப்பட்டவர்கள்: 2 லட்சத்து 49 ஆயிரத்து 294 பேர்
தேர்வு எழுதியவர்கள்: 1 லட்சத்து 86 ஆயிரத்து 128 பேர்
தேர்வு முடிவுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in-இல் தெரிந்துகொள்ளலாம்.
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு சென்னையில் டிசம்பர் 1 முதல் 4 வரை நடைபெறும். தேர்வர்கள் அதற்கான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து கட்டணம் செலுத்த வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி கேட்டுக் கொண்டுள்ளது.
Edited by Mahendran
