1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TNPSC group 1 hall ticket issued

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு.. ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்யும் இணையதளம் அறிவிப்பு..!

டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஆகஸ்ட் 10 முதல் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
தமிழக அரசு அலுவலகங்களில் உள்ள காலியான பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன என்பது தெரிந்தது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இதற்கான தேர்வு ஆகஸ்ட் 10 முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 
 
இந்த நிலையில் இந்த  தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் http://tnpscexams.in  என்ற இணையதளத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து விண்ணப்பதாரர்கள்  ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து வருவதாகவும் தேர்வுக்கு தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
வரலாறு காணாத வெயில்: வீட்டை விட்டு வெளியே வராதீங்க! – அரசு எச்சரிக்கை!