புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 30 நவம்பர் 2018 (16:53 IST)

கூட்டுறவு சங்கங்களில் வேலை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாட்டு அரசுப் பணியாளர்களுக்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. அண்மையில் குரூப் 2 தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அதையடுத்து தற்போது கூட்டுறவு சங்கங்களுக்கான பணிகளுக்கு தேர்வுகளை நடத்த இருக்கிறது.

கூட்டுறவு சங்கங்களில் உள்ள இளநிலை ஆய்வாளர்களுக்கான தேர்வுகள் அடுத்த மாதத்தில் நடைபெற இருக்கின்றன. அந்த தேர்வுகளுக்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விண்ணப்பிக்க நவம்பர் 28 ஆம் தேதி கடசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் கஜா புயலால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். இந்நிலையில் டெல்டா மாவட்ட மாணவர்களால் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க முடியாத சூழல் உருவானது. அதனால் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாளை டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது  டிஎன்பிஎஸ்சி நிர்வாகம்.

ஆனால் தேர்வுகள் நடைபெறும் நாளில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளது.