1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 ஜூலை 2022 (08:38 IST)

5,318 பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து! – ஷாக் கொடுத்த மின்சார வாரியம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியான 5,318 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் அறிவிப்பை ரத்து செய்வதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், உதவிப் பொறியாளர், கள உதவியாளர், உதவி கணக்கு அலுவலர் உள்ளிட்ட 5,318 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டது. பலரும் இந்த பணிகளுக்காக விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது 5,318 பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் ரத்து செய்யப்படுவதாகவும், கணினி வழி தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்காக விண்ணப்பித்தோரின் விண்ணப்ப கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தேர்வுக்கு ஆயத்தமானவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.