வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 6 ஜூலை 2022 (08:17 IST)

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

teacher
தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி கூறப்படுகிறது 
 
தமிழ்நாட்டில் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணி வரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை இன்று இரவு 8 மணிக்குள் கல்வி அனைவருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது 
 
எனவே தற்காலிக ஆசிரியர் பணிக்குவிண்ணப்பிக்க விரும்புபவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது 
 
இந்த நிலையில் அரசுப் பள்ளிகள் கல்லூரிகளில் 10571 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆண்டு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும் டிசம்பரில் தேர்வு நடத்தப்படும் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது