புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 10 ஜூன் 2019 (12:55 IST)

ஒரே நாளில் பிரதமரை சந்திக்கும் மூன்று ஆளுனர்கள்: பரபரப்பு தகவல்

தமிழக, ஆந்திரா மற்றும் மேற்குவங்க ஆளுனர்கள் இன்று ஒரே நாளில் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர்களை சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மக்களவை தேர்தலின் வெற்றிக்குப் பின்னர் ஒரே நாளில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், ஆந்திர மாநில ஆளுனர் நரசிம்மன் மற்றும் மேற்குவங்க ஆளுனர் கேசரிநாத் திரிபா ஆகிய மூன்று ஆளுநர்களும் இன்று பிரதமரை சந்திப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கபடுகிறது. மேலும் மூன்று மாநில ஆளுனர்களும் தனித்தனியாக இல்லாமல் ஒரே நேரத்தில் பிரதமரை சந்திக்கவிருப்பது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது. 
 
இந்த சந்திப்பின்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுகவின் 2 ஜி வழக்கு, 7 பேர் விடுதலை ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், மக்களவை தேர்தலின்போது பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்களுக்கு எதிராக வழக்குகள் பாயும் வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
 
மூன்று மாநில ஆளுனர்களின் சந்திப்பு பின்னர் மத்திய அரசிடம் இருந்து ஒருசில அதிரடி அறிவிப்புகள் வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது