வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 10 ஜூலை 2021 (09:24 IST)

அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை அதிகரித்த தமிழக அரசு!

அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை அதிகரித்து அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

 
ஆம், அரசு பேருந்துகள் மற்றும் விரைவு பேருந்துகளின் ஆயுட்காலத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. 
 
அரசு விரைவு பேருந்து: ஏற்கனவே இருந்த 3 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கி.மீ பயணிக்கலாம் என்பது தற்போது 7 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ என மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
மற்ற பேருந்துகள்: ஏற்கனவே இருந்த 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கி.மீ பயணிக்கலாம் என்பது தற்போது 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ என மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.