வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 23 மார்ச் 2018 (22:30 IST)

யானை மரணம்: ஆட்சிக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஆபத்து??

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1995 ஆம் ஆண்டு ஆட்சி முடியும் தருவாயில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோலிலுக்கு யானை ஒன்றை வாங்கி கொடுத்து அதற்கு ருக்கு என பெயரிட்டார்.
 
தற்போது 29 வயதாகும் ருக்கு இறந்துவிட்டது. கோவில் நிர்வாகம் நள்ளிரவு 12.30 மணிக்கு நாய் விரட்டியதால் அதற்கு பயந்துபோனதில் யானை இறந்துவிட்டது என குறிப்பிட்டனர். ஆனால், உண்மை வேறு ஒன்றாக உள்ளது. 
 
ருக்கு நாய்களுக்கு எப்போதுமே பயப்படாது. ஆனால், ருக்கு இறந்த நாளன்று, பயங்கரமாக பிளிறி உள்ளதாம். இதன் பின்னர் யானை பாகன் ருக்குவை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளார். ஆனால், அப்போதும் ருக்கு பிளிறியுள்ளது. 
 
அதன் பின்னர் ஒரு கட்டத்தில், பிரகாரத்தில் முட்டிக்கொண்டு இறந்துவிட்டது என கோவிலில் வேலை செய்யும் சிலர் கூறியுள்ளனர். மேலும், நாய்க்கு பயந்து ருக்கு இறந்துவிட்டதாக மேலிடம் சொல்ல சொன்னதாகவும் கூறியுள்ளனர். 
 
கோவில் பிரகாரத்தில் யானை முட்டிக்கொண்டு உயிர் இறந்த்தால் தற்போதைய ஆட்சிக்கும் ஆட்சியாளர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என கோவில் வட்டாரங்கள் பேசப்படுகிறதாம்.