வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 20 மார்ச் 2018 (20:17 IST)

மறைந்த கணவரை காண தஞ்சை வந்தடைந்தார் சசிகலா...

மறைந்த தனது கணவர் நடராஜனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு பரோல் கிடைத்த சசிகலா சிறையிலிருந்து புறப்பட்டு தற்போது தஞ்சைக்கு வந்துள்ளார். 
 
சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று அதிகாலை மரணம் அடைந்த நிலையில் தனது கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 15 நாட்கள் பரோல் வேண்டும் என்று சசிகலாவின் தரப்பில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. 
 
அதை சிறை நிர்வாகம் ஏற்று அவருக்கு 15 நாள் பரோல் வழங்கியது. இதையடுத்து, மதியம் சிறையில் இருந்து கார் மூலம் சசிகலா காரில் புறப்பட்டார். தற்போது அவர் தஞசை வந்தடைந்துள்ளார். 
 
இந்நிலையில் நாளை மாலை 4.30 மணிக்கு நடராஜனின் இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. விளாரில் நடைபெறும் இறுதிச் சடங்கில் சசிகலா பங்கேற்கிறார்.