தீபாவளிக்கு 16,888 சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்துத்துறை அறிவிப்பு.
அக்டோபர் 24 ஆம் தேதி தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 15 நாட்களுக்கு பட்டாசு விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதனைத்தொடர்ந்து தற்போது தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை தியாகராயர் நகரில் அக்டோபர் 8 முதல் அக்டோபர் 24 ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க மக்கள் அதிகளவில் தியாகராயர் நகர் பகுதிக்கு வர உள்ளதால் இந்த போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ஆட்டோக்கள் தியாகராயர் சாலை, தணிகாசலம் சாலை சந்திப்பில் இருந்து பனகல் பூங்கா நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் உழுவதும் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இதே போல தீபாவளி முடிந்த பிறகு பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வர அக்டோபர் 24 முதல் 26 வரை தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 3,062 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited By: Sugapriya Prakash