1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 18 டிசம்பர் 2020 (10:55 IST)

எம்ஜிஆர் ஜெயலலிதாவிற்கு இருவருக்குமே மக்கள்தான் வாரிசு: முதல்வர் பழனிச்சாமி

எம்ஜிஆர் ஜெயலலிதாவிற்கு இருவருக்குமே மக்கள்தான் வாரிசு
தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருக்குமே மக்கள்தான் வாரிசு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசியுள்ளார்
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அம்மா மினி கிளினிக் என்ற திட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தனது சொந்த மாவட்டமான சேலத்தில் மினி கிளினிக்கை இன்று அவர் திறந்து வைத்தார் 
 
சேலம் பனைமரத்துப்பட்டி அருகே அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசிய தமிழக முதல்வர் அவர்கள் ’எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் வாரிசுகள் யாரும் கிடையாது என்றும், இருவருக்குமே மக்கள் தான் வாரிசு என்று கூறினார். எம்ஜிஆரின் வாரிசு என கமல்ஹாசன் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் பேசி வரும் நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே முதல்வர் இவ்வாறு பேசியுள்ளார் என்று கருதப்படுகிறது
 
மேலும் அதிமுக அரசு நேரடியாக மக்களோடு பேசி வருகிறது என்றும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களுக்கு அதிமுக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும் அவர் கூறினார்