தொடர்புடைய செய்திகள்
- தமிழை விட தெலுங்கு பேசுபவர்களே அதிகம்: அதிமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு!
- முக ஸ்டாலின் அதுக்கெல்லாம் சரிப்பட மாட்டார்: அமைச்சர் செல்லூர் ராஜூ
- ஜெயலலிதாவின் ஆன்மா முதல்வர் எடப்பாடி மேல் உள்ளது : அமைச்சர் பேச்சு !
- இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவை கோரும் ஜெயக்குமார்.. பொன்னாருடன் சந்திப்பு
- அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சை பேச்சு: மக்களவை சபாநாயகரிடம் புகார்
பூம் பூம் பூம் மாட்டுக்காரன்... ரெட் டி-ஷர்ட் போட்டு; பாட்டு பாடி அசத்தும் ஜெயகுமார்!
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், பூம் பூம் மாட்டிடம் ஆசி பெற்று பாட்டு பாடி மகிழும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், பட்டினப்பாக்கத்தில் அமைந்துள்ள தனது வீட்டின் வீதியில் வந்த பூம் பூம் மாட்டை கண்டு உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்து பூம் பூம் மாட்டிடம் ஆசி பெற்றார். பின்னர் இது குறித்து பாட்டு பாடி கருத்து தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி, டும் டும் மேளந்தட்டி சேதி சொன்னான்டி என்பது அந்தக்கால இளசுகளின் ரிங்டோன். பல ஆண்டுகளுக்குப் பிறகு பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
பூம் பூம் மாட்டின் தலையசைப்பும், பூம் பூம் மாட்டுக்காரரின் பேச்சும் எனக்குள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நமது பண்பாட்டு கூறுகளை, பாரம்பரிய அம்சங்களை கேலியாக பார்க்கும் மனோபாவம் நிறைய பேரிடம் உள்ளது. ஆனால், பூம் பூம் மாட்டுக்காரர் போன்றவர்களை நாம் மறந்து விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
