செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 5 அக்டோபர் 2019 (21:16 IST)

ஜெயலலிதாவின் ஆன்மா முதல்வர் எடப்பாடி மேல் உள்ளது : அமைச்சர் பேச்சு !

தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வரின் அறிவிக்கும் திட்டங்களைப் பாராட்டி அனைத்து அமைச்சர்களும் பேசுவது வழக்கம். ஆனால் இன்று, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா முதல்வர் எடப்பாடிக்குள் புகுந்துள்ளது என ஒரு அமைச்சர் பேசியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி வருகிறது.
இன்று, அதிமுக அமைசசர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளதாவது :
 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேல் புகுந்ததால் அவரைப் போல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் எனத் தெரிவித்துள்ளார். அமைச்சரின்  இந்தப் பேச்சுக்கு பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.