வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2024 (12:51 IST)

ஆட்டோ கட்டணம் மறுசீரமைப்பு: தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்!

தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணம் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.  
 
இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் அவர்கள் பேசிய போது ’கடந்த 2013 ஆம் ஆண்டு அரசு நிர்ணயத்தை ஆட்டோ கட்டணம் தான் தற்போது வரை வசூலிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் ஆட்டோ கட்டணம் மறுசீரமைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தற்போது இது அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் தெரிவித்தார். 
 
மேலும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும் எனவே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் சென்னையில் உரிமம் பெற்ற ஆட்டோக்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்றுவர முடியும் என்றும் அதற்கான அறிவிப்பும் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Mahendran