ஜாமீன் கிடச்சாலும் வெளியே வரக்கூடாது - கருணாஸை பழிதீர்த்த தமிழக அரசு
கருணாஸ் எம்.எல்.ஏ மீது தொடரப்பட்ட ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்தும் அவர் வெளியே வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ், தமிழக முதல்வரை சர்ச்சைக்குரிய பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் கருணாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணையும் நடைபெற்று வந்தது.
அதே சமயம், ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின் போது, ரசிகர்களை தாக்கியதாக அவர் மீது இரு புதிய வழக்குகளை பதிவு செய்த போலீசார் கருணாஸை மீண்டும் கைது செய்தனர். இந்த வழக்கில், அக் 4ம் தேதிவரை அவரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில்தான், கருணாஸின் ஜாமீன் மனு தொடர்பான வழக்கில், அவருக்கு ஜாமீன் வழங்கி இன்று நீதிபதி உத்தரவிட்டார். ஆனாலும், ஐ.பி.எல் வழக்கில் அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருப்பதால், அந்த வழக்கிலும் ஜாமீன் பெற்றால் மட்டுமே அவர் சிறையிலிருந்து வெளியேற முடியும் என்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அவர் எப்படியும் ஜாமீன் பெற்றுவிடுவார் என்பதை முன்பே அறிந்த தமிழக அரசு, ஐ.பி.எல் வழக்கில் அவரை மீண்டும் கைது செய்து அவர் வெளியே வரமுடியாமல் தடுத்துவிட்டதாக கருணாஸின் ஆதரவாளர்கள் குமுறி வருகின்றனர்.