விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள்: தமிழக அரசு அதிரடி முடிவு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட 5 அவதூறு வழக்ககுளை தமிழக அரசு திரும்பப் பெற்றது. இதனால் இந்த வழக்குகள் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரையும் பற்றியும் அவரது அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியவர்களில் ஒருவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதனால் அவர் மீது பல்வேறு அவதூறு வழக்குகள் தமிழக அரசின் சார்ப்பில் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளின் விசாரணை கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஒருசில வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு ஒருசில வழக்குகள் விசாரணையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன. தம் மீது எத்தனை அவதூறு வழக்குகள் தொடர்ந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் மக்கள் பிரச்னையை பேசுவேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தேமுதிக மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. தற்போது அதிமுகவுடன் தேமுதிக தோழமை கட்சியாக இருப்பதால் இந்த முடிவை தமிழக அரசு எடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதனை அடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகள் அனைத்தும் முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது