1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN Govt request for government honor for Vivek

விவேக்கிற்கு அரசு மரியாதை?

விவேக்
மறைந்த நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு சார்பில் காவல்துறை மரியாதை அளிப்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு அனுமதி கேட்டு கடிதம். 

 
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார் என்றும் உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் கடந்த 15 அம் தேதி கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.     
 
இதனிடையே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று செய்தி வெளியிட்டன. இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.  இவரது மரணத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  
 
அந்த வகையில், மறைந்த நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு சார்பில் காவல்துறை மரியாதை அளிப்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. தேர்தல் ஆணைய நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தமிழக அரசு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
விவேக் மரணத்திற்கு மோடி இரங்கல்!