வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்த கிராமத்திற்கு சாலை : பணிகள் தொடக்கம்
வேலூர் அருகே உள்ள மலை கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் செல்லாததால் பாதி வழியில் இறக்கி விட்ட நிலையில் அந்த ஆம்புலன்ஸில் பெற்றோர் தங்கள் இறந்த குழந்தையை கையில் சுமந்து கொண்டு பத்து கிலோமீட்டர் நடந்த கொடூர சம்பவம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்
இந்த நிலையில் தற்போது வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்த மலை கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. குழந்தையின் சலலத்துடன் தாய் 10 கிலோமீட்டர் நடந்து சென்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது
வனத்துறை, கிராம ஊரக வளர்ச்சித் துறையினர் இணைந்து தார் சாலை அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Mahendran