1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 மே 2023 (11:18 IST)

Income Tax அதிகாரிகள் என ஆட்டையை போட வந்த கும்பல்! – வேலூரில் பரபரப்பு!

வேலூரில் மதபோதகர் வீட்டில் ஐ.டி ரெய்டு செய்ய வந்த போலி கும்பம் மக்களை கண்டதும் சிதறி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் அடிக்கடி பல முக்கியஸ்தர்கள் வீடுகள், அலுவலகங்களில் வருமானவரி துறையினர் சோதனை நடத்துவது வழக்கமாக உள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு சில கும்பல் வருமானவரி அதிகாரிகள் போல நடித்து சில இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அப்படியான ஒரு சம்பவம் வேலூரில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வேலூர் குடியாத்தம் பகுதியில் வசித்து வருபவர் கிறிஸ்தவ மதபோதகர் பிரான்சிஸ். இவரது வீட்டிற்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல் தங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் என்றும், அவரது வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

அதற்கு பிரான்சிஸ் அவர்களது அடையாள அட்டையை காட்டும்படி கேட்டுள்ளார். உடனே அவர்கள் பிரான்சிஸை உள்ளே இழுத்து சென்றுள்ளனர். இதை கண்டு அவரது மனைவி கூச்சலிடவே அருகில் உள்ள அக்கம்பக்கத்தினர் அங்கு குவிந்துள்ளனர். அதை கண்டு அந்த கும்பல் நாலா பக்கமும் சிதறி ஓடியுள்ளது. அதில் சென்னையை சேர்ந்த சுரேஷ் என்ற நபர் மட்டும் போலீஸிடம் சிக்கிய நிலையில் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edit by Prasanth.K