1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 மே 2023 (12:43 IST)

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.... 30க்கும் மேற்பட்டோர் காயம்

vilupuram
விழுப்புரம் அருகே சாலையோர பள்ளத்தில் பேருந்து  ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 30 க்கும் மேற்பட்டோர்  காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சென்னை - கும்பகோணம் தேசிய  நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சமாதேவி என்ற இடத்தில், தனியார் பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனார்.  அருகில் உள்ள மக்கள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  அனுமதித்தனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இப்பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.