வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 16 செப்டம்பர் 2023 (11:47 IST)

மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லையா? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு..!

TN assembly
மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் இ சேவை மையங்கள் மூலம் செப்டம்பர் 18ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அர்சு தெரிவித்துள்ளது.
 
மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டவர்கள் விண்ணப்பம் செய்தால் அடுத்த 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அர்சு தெரிவித்துள்ளது.
 
மேலும் தகுதியான ஆவணங்கள் மற்றும் தகுதியான மகளிருக்கு கட்டாயம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும், நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் நாளை மறுநாள் முதல் குறுஞ்செய்தியாக 56.6 லட்சம் மகளிருக்கு அனுப்பப்படும் என்றும் தமிழக அர்சு தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran