ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (14:40 IST)

யார் யாருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது? உரிமைத்தொகை ரூ.1000 குறித்த முக்கிய தகவல்..!

மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தவர்களில் யார் யாருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது? என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
 
மகளிர் உரிமைத்தொகை ரூ.1000  திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல், விண்ணப்பதாரர்களின் தொலைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும்,  மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்ற விபரம் அந்த குறுஞ்செய்தியில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
கார் உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருந்தவர்கள் விண்ணப்பித்ததால் அவர்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்கும். அதேபோல் வீட்டில் 3600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் மகளிரின் விண்ணங்களும் நிராகரிக்கப்பட்டு இருக்கும். 
 
மேலும் ரூ.2.5 லட்சத்துக்கு அதிக வருமானம், அரசு வேலையில் உள்ளோரின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva