செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 14 செப்டம்பர் 2023 (07:22 IST)

மகளிர் உரிமை திட்டம்.. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம்..!

magalir urimai thogai
தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 
 
செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தின் படி மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் அனுப்பப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில்  விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்குள் இ சேவை மையத்தில் மேல்முறையோடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டவர்களுக்கு எஸ்எம்எஸ் வரும் என்றும் அதேபோல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் எஸ்எம்எஸ் வரும் என்றும் 18 ஆம் தேதி முதல் இந்த எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
 
இந்த எஸ்எம்எஸ் கிடைத்தவுடன் நிராகரிக்கப்பட்டவர்கள் இ சேவையில் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva