1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN Govt filed case against governor ravi

ஆளுனர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு.. தமிழக அரசு அதிரடி..!

ஆளுனர்
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடியாக வழக்கு தொடர்ந்து உள்ளது.

தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றிய மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படும் நிலையில் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட கால வரம்புக்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் அதற்கு முன்பாகவே ஆளுநர் ஒரு சில மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பாரா? அல்லது சட்ட ரீதியாக இந்த வழக்கை சந்திப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை.. பொதுமக்கள் சிரமம்..!