திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (12:39 IST)

விபத்து ஏற்பட்டால்தான் தமிழக அரசுக்கு முழிப்பு வருமா? அண்ணாமலை கேள்வி..!

பெரும் விபத்து ஏற்பட்டால்தான் தமிழக அரசுக்கு முழிப்பு வருமா? என திமுக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
 
பண்ருட்டி சன்னியாசிபேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சமையல் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கிறது. இந்த விபத்தில் சத்துணவு பெண் அமைப்பாளர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  
 
தமிழகம் முழுவதும் சிதிலமடைந்து இருக்கும் பத்தாயிரத்துக்கும் அதிகமான பள்ளிக் கட்டிடங்களை இடித்து, புதிய கட்டிடங்கள் கட்டப் போவதாக அறிவித்த திமுக, அதன் பிறகு அது குறித்துப் பேசுவதே இல்லை. பெரும் விபத்து ஏற்பட்டால்தான் தமிழக அரசுக்கு முழிப்பு வருமா? 
 
தேவையில்லாத விளம்பரச் செலவினங்களை விடுத்து, மாணவர்களுக்குப் பயன்படும் பள்ளிக் கட்டிடங்களை உடனடியாகக் கட்டித் தர வேண்டும் என்று, தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
 
 
Edited by Siva