வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (07:59 IST)

காலை உணவுத்திட்டம் காப்பியடிக்கப்பட்ட திட்டம்: தமிழிசை செளந்திரராஜன்..

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்டம் காப்பி அடிக்கப்பட்டுள்ள திட்டம் என புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  
 
சமீபத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக முழுவதிலும் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு பல அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் '
 
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் புதிய கல்வி திட்டத்தில் உள்ள காலை உணவு திட்டத்தை காப்பியடித்து தான் தமிழக அரசு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளது என்றும் எனவே இது ஒரு காப்பி அடிக்கப்பட்ட திட்டம் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை என்றும் ஒரு மசோதா ஆளுநர் கையில் நிலுவையில் இருந்தால் அதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva