திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (10:23 IST)

வியட்நாமிய மொழி படத்துக்கு இசையமைத்த சாம் சி எஸ் – அட இயக்குனர் இவர்தானா?

தமிழ் திரையுலகில் வளரும் இசையமைப்பாளராக இருந்து வரும் சாம் சி எஸ் இப்போது வியட்நாமிய மொழிப் படம் ஒன்றுக்கு இசையமைக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் விக்ரம் வேதா மற்றும் கைதி ஆகிய படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் கவனம் பெற்றவர் சாம் சிஎஸ். இந்நிலையில் இவர் இப்போது வியட்நாமிய மொழியில் உருவாகியுள்ள பாக்ஸிங் சம்மந்தப்பட்ட ஆக்‌ஷன் படம் ஒன்றுக்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் இயக்கியுள்ளார். சாம் ஹொய் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்துக்கு இசையமைத்த அனுபவம் பற்றி சாம் சி எஸ் ‘மிக மகிழ்ச்சியாகவும் அதே நேரம் கொஞ்சம் பதற்றமாகவும் உள்ளது. இங்கு கிடைத்த வரவேற்பு உலக அளவிலும் கிடைக்கும் என நம்புகிறேன். என் மேல் இயக்குனர் வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றி. இந்த படம் வெளிவரும் முன்னரே கொரிய படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புக் கிடைக்கின்றன. ‘ எனக் கூறியுள்ளார்.