வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 12 மே 2021 (11:19 IST)

மருத்துவர்களுக்கு ரூ.30 ஆயிரம், நர்ஸ்களுக்கு ரூ.20 ஆயிரம்: ஊக்கத்தொகையை அறிவித்த தமிழக அரசு

கொரோனா வைரஸ் காலத்தில் அல்லும் பகலும் 24 மணி நேரமும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
சற்றுமுன் தமிழக முதல்வரிடம் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்த அறிவிப்பு ஒன்றில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க இந்த அரசு முடிவு செய்துள்ளது 
 
இதன்படி கொரோனா 2ஆம் அலை பாதிப்பு காலமான ஏப்ரல் மே ஜூன் ஆகிய மூன்று மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு ரூபாய் 30,000 செவிலியர்களுக்கு ரூபாய் 20 ஆயிரமும் இதர பணியாளர்களுக்கு 15 ஆயிரமும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரமும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முதல்வருக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்