வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 6 ஜனவரி 2022 (19:14 IST)

பொங்கல் தொகுப்பு வழங்கும் தேதி நீட்டிப்பு!

பொங்கல் தொகுப்பு பொருள்கள் வழங்கப்படும் தேதி நீடிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் விருந்தாக 21 பொருட்கள் அடங்கிய பை, ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த பொங்கல் தொகுப்பு பொருள்கள் ஜனவரி 10-ஆம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பொங்கல் தொகுப்பு பொருள்கள் வழங்கப்படும் தேதி நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
ஜனவரி 31ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு பொருட்களை அரிசி அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது