1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN Govt announced 16,540 special buses for Diwali

தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – தமிழக அரசு அறிவிப்பு!

Tamilnadu
அடுத்த மாதம் தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 4ம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பலரும் தங்கள் சொத்த ஊருக்கு செல்வார்கள் என்பதால் அந்த சமயம் சிறப்பு பேருந்துகள் பல இயக்கப்படுவது வழக்கம்

அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னை மற்றும் மற்ற நகரங்களில் இருந்து 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் இந்த சிறப்பு பேருந்துகள் செயல்படும். பின்னர் தீபாவளி முடிந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு திரும்புவதற்காக 17,719 சிறப்பு பேருந்துகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தற்போது ஆயுத பூஜைக்கு ஊருக்கு செல்பவர்களுக்காக 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அடுத்த கட்டுரையில்
பச்சை நிறத்தில் காட்சி அளித்த பாம்பன் பாலம் - அச்சத்தில் மீனவர்கள்!