1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 6 மே 2020 (08:27 IST)

ஜெயலலிதாவின் வேதா இல்லம் குறித்து தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அவருடைய நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வேண்டுகோளை அடுத்து இதற்கான பணிகளை அரசு செய்து வந்தது. 
 
இந்த நிலையில் சென்னை போயஸ்கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கும் பணியில் தமிழக அரசு தற்போது தீவிரம் காட்டியுள்ளது. முன்னால் முதல்வர் ஜெயலலிதா இடத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
 
போயஸ் கார்டன் பகுதி மக்களின் கருத்தை கேட்டறிந்த நிலையில் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஜெயலலிதாவின் இடத்தை கையகப்படுத்துவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
 
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் என்பதும், ‘வேதா இல்லமானது எங்களது பூர்வீக சொத்து என்றும், இதனை வாங்கவோ, விற்கவோ யாருக்கும் உரிமை கிடையாது என்றும் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வேதா இல்லத்தை தமிழக அரசு கையகப்படுத்துவதை டிடிவி தினகரனும் எதிர்த்தார் என்பது தெரிந்ததே