1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN Governor Rosaiah Election Commission opposition

ரோசய்யா-வை புரட்டிஎடுத்த தேர்தல் ஆணையம்

ரோசய்யா-வை புரட்டிஎடுத்த தேர்தல் ஆணையம்

தமிழக ஆளுநர் ரோசய்யா
தமிழகத்தில் தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தேர்தலில் தமிழக ஆளுநர் ரோசய்யா தலையீட்டுக்கு தேர்தல் ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 

 
தமிழகத்தில் மே 16 ஆம் தேதி 232 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை  தொகுதியில் வாக்காளர்களுக்கு லஞ்சமாக பணம் மற்றும்  பல்வேறு பரிசுப்பொருட்கள் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, அரவக்குறிச்சி மற்றம் தஞ்சை தொகுதியில் மே 23 ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தன.
 
இதனையடுத்து, அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதியில் உடனே தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
 
பின்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இதற்கு, ஜூன் 13 ஆம் தேதிக்கு தேர்தலை ஒத்திவைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டு மே 27 ஆம் தேதிக்குள் கேட்டு முடிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்த நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரண்டு சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தலை வரும் ஜூன் 1 ஆம் தேதிக்கு முன்பு நடத்த வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையருக்கு தமிழக கவர்னர் ரோசய்யா கடிதம் எழுதியுள்ளார்.
 
தமிழக சட்டமன்றத் தேர்தல் விவகாரத்தில், தமிழக கவர்னர் ரோசய்யா நேரடியாக தலையிட்டது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், தேர்தல் தொடர்பாக ஆளுநர் கடிதம் எழுத தேவையில்லை. தேர்தல் நடத்துவது ஒத்திவைப்பது என எல்லாமே தேர்தல் ஆணையத்தின் பணி. சட்டத்தின்படியே தேர்தல் ஆணையம் செயல்படும். அதற்கு மாறாக ஒரு போதும் செயல்படமுடியாது. எனவே, ஆளுநரின் செயல் தேர்தல் நடைமுறையை மீறுவதாக உள்ளது. வருத்தம் அளிப்பதாக உள்ளது என ரவுண்டு கட்டி விளாசியுள்ளது.
 
இந்திய அரசியல் வரலாற்றில், ஒரு மாநில ஆளுநரை தேர்தல் ஆணையம் இப்படி புரட்டி எடுத்துள்ளது இதுதான் முதல்முறை ஆகும். 
 
About Writer
K.N.Vadivel
அடுத்த கட்டுரையில்
ஜெயலலிதாவுக்கு சிறிதளவாவது அக்கறை இருந்தால்; ராமதாஸ் சொல்ல வருவது என்ன?