1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN Governor Ravi to meet Modi

நீட் குறித்து பேச திட்டமா? மோடியை சந்திக்கும் தமிழக ஆளுநர்!

டெல்லி
இன்று மாலை 5 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்களை சந்தித்து பேச திட்டம். 

 
கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி நீட் விலக்கு கோரி சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அக்டோபர் 13 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தித்தார்.  
 
இதனிடையே இன்று மாலை 5 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். மேலும், நீட் விலக்கு கோரி கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசிய நிலையில் ஆளுநரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
அரசு பல்தொழில்நுட்பக்‌ கல்லூரி விரிவுரையாளருக்கான தேர்வுகள் அறிவிப்பு