1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Updated : வியாழன், 21 அக்டோபர் 2021 (17:56 IST)

என்னது சூப்பர் ஸ்டார் சூர்யாவா? புதிதாக வந்த குழப்பம்!

நடிகர் சூர்யா நடிப்பில் இப்போது ஜெய் பீம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ள நிலையில் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படம் முழுவதுமாய் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் முன்னதாகவே அமேசான் ப்ரைம் ஓடிடிக்கு விற்கப்பட்டது.

இதனால் இந்த படம் அமேசானில் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்னர் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படம் சம்மந்தமாக சூர்யாவின் 2டி நிறுவனம் ஒரு பத்திரிக்கை குறிப்பை அனுப்பியபோது அதில் ’சூப்பர் ஸ்டார் சூர்யா நடிக்கும்’ எனப் போட்டு அனுப்பியுள்ளார்களாம்.

வழக்கமாக ரஜினிகாந்த் மட்டுமே அந்த பட்டத்தை போட்டு கொண்டு வரும் நிலையில் இப்போது சூர்யா இப்படி செய்தது பலருக்கும் குழப்பத்த்தை ஏற்படுத்தியுள்ளது.