செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 31 அக்டோபர் 2023 (13:57 IST)

மக்களின் உரிமைகளை ஆளுநர் பறித்து வருகிறார்: தமிழக அரசு குற்றச்சாட்டு..!

TN assembly
பல்வேறு விஷயங்களில் செயலற்றவராக இருப்பதன் மூலம் மக்களின் உரிமைகளை ஆளுநர் பறித்து வருகிறார் என  தமிழக அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாகவும், நீட் விலக்கு மசோதா, சிறைக்கைதிகள் விடுதலை, டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் உள்ளிட்டவற்றில் எந்த முடிவும் எடுக்கவில்லை என தமிழக அரசு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

மேலும் முக்கியமான விவகாரங்களில் ஆளுநர் உடனுக்குடன் முடிவு எடுப்பதில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி தனது அதிகாரத்தையும் பொறுப்பையும் ஆளுநர் ஆர்.என்.ரவி துஷ்பிரயோகம் செய்கிறார் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசின் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva