1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2018 (19:26 IST)

ஜெயலலிதா பிறந்த நாளில் சிறை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு!

இறந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களை அவர்களது வழக்கிற்கு ஏற்ப விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
 
கடந்த தேர்தலின் போது ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளில் ஒன்று சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கைதிகளை விடுதலை செய்வது. இதனை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நிறைவேற்ற உள்ளது.
 
சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்று வருபவர்களை நன்னடத்தை மற்றும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஜெயலலிதாவின் பிறந்த நாளில் நிறைவேற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
 
இதற்காக கைதிகளின் விவரங்களை 9 மத்திய சிறைச்சாலைகளிலும் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது தமிழக அரசு. 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை அவர்களது வழக்கிற்கு ஏற்றது போலவும், 60 வயதுக்கு மேல் சிறையில் 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளனர்.