தொடர்புடைய செய்திகள்
- சோலாவா களமிறங்குறது ரிஸ்க் அண்ணே!? – விஜயகாந்தை சந்திக்கும் டிடிவி தினகரன்!
- பாஜகவுக்கு தளம் அமைக்கவுமில்லை; அமமுகவை இணைக்கவுமில்லை! – எடப்பாடியார் திட்டவட்டம்!
- மீண்டும் சரிந்த தங்கம் விலை! – இன்றைய நிலவரம்!
- ஜெயங்கொண்டம் தொகுதியில் இரண்டாக பிரியும் பாமக வாக்குகள்!
- தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இயக்குனர் ஜனநாதன் உடல்நிலை
வேட்புமனு தாக்கல் தொடங்கியது; இன்று வேட்பு மனு அளிக்கிறார் ஓபிஎஸ்!
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.
தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.
அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் இன்று போடி தொகுதியில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ள மு.க.ஸ்டாலின் மார்ச் 15ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
வேட்பு மனுக்களை ஆன்லைனில் டௌன்லோட் செய்து பூர்த்தி செய்து கட்டணம் செலுத்தி ஆன்லைவிலேயே செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று தொடங்கி சனி, ஞாயிறு தவிர மார்ச் 19 வரை தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
