EPS ஒரு விநோத விவசாயி - உதயநிதி ட்விட்டின் உள்குத்து என்ன??
விவசாய மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தக மற்றும் வணிக மசோதா, விலை உறுதிபாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் சட்டதிருத்த மசோதாக்கள் எதிர் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களைவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாவை எதிர்த்து அகாலிதள அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் இன்று இந்த மசோதாக்கள் மாநிலங்களவை ஒப்புதலுக்கு வந்தது. இதை எதிர்த்து எதிர்கட்சியினர் பேசிய போதும் வெற்றிகரமாக மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் விவசாய மசோதாக்களை தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதனிடையே உதயநிதி ஸ்டாலின் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, விவசாய மசோதாக்களின் குறைகளை சுட்டிக் காட்டினேன். ஆனால் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது மேலிட உத்தரவு என்கிறார் அதிமுக எம்.பி S.R.பாலசுப்பிரமணியன். எதிர்ப்புதான் ஆனா ஆதரவு. ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும். EPS ஒரு விநோத விவசாயி.#விவசாயிகளின்_விரோதி_அதிமுக என பதிவிட்டுள்ளார்.