1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 27 மார்ச் 2018 (18:35 IST)

மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசு அதிரடி முடிவு

வரும் 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் மத்திய அரசு மீது நீதிமன்ற வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 
மத்திய அரசு 6 வாரத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து உச்ச நீதிமன்ற கொடுத்த காலக்கெடு இன்னும் மூன்று நாட்களில் முடிவடைய உள்ளது. தமிழக அரசு மற்றிம் அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து இந்த விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
 
ஆனால் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து இன்று கர்நாடக மாநிலத்தின் சட்டமண்ர தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது.
 
இந்த தேர்தல் அறிவிப்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையாக இருக்குமோ என்ற அச்சமும் கேள்வியும் எழுந்தது. ஆனால் தேர்தலுக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தற்போது மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஒருவேளை வரும் வரும் 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் மத்திய அரசு மீது நீதிமன்ற வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
 
இந்த வழக்கு தமிழகத்திற்கு வலுவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே தமிழக அரசு இந்த முடிவுக்கு வந்தது. மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தேவின் அறிவுரைப்படி வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.