திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2020 (07:44 IST)

தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியான 8வது நபர்: பரபரப்பு தகவல்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக மிக வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்திலும் நாள்தோறும் சராசரியாக 50க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி தினமும் ஓரிரு உயிர்ப்பலிகளும் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா பாசிட்டிவ் 65 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார் என்றும் இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது என்றும் தெரிவித்தார்
 
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்த ஒரு சில மணி நேரங்களில் வேலூரில் கொரோனாவால் ஒருவர் பலியாகியுள்ளார். வேலூரைச் சேர்ந்த 45 வயது நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 50க்கும் மேற்பட்டோர் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், ஓரிருவர் உயிரிழந்தும் வருவது தமிழக மக்களிடையே பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது