திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 3 டிசம்பர் 2018 (08:55 IST)

சபாநாயகர் தனபாலை சந்திக்கும் காங்.எம்.எல்.ஏக்கள்: காரணம் என்ன?

தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் அவர்களை இன்று காலை 10.45 மணிக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த சந்திப்பின்போது சமீபத்தில் டெல்டா மாவட்ட மக்களை பெரும் துன்பத்தில் ஆழ்த்திய கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் முறையாக வழங்க வலியுறுத்தவுள்ளதாக தெரிகிறது.

மேலும், மேகதாது விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க சட்டமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கவும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கள் கோரிக்கையை முதல்வர், துணை முதல்வரிடம் தெரிவிக்காமல் நேரடியாக சபாநாயகரை சந்தித்து கோரிக்கை விடுக்க திட்டமிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.