வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 22 நவம்பர் 2018 (08:02 IST)

கஜா புயல் நிவாரணம்: களத்தில் இறங்கிய கமல்ஹாசன்

சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலின் பாதிப்புகளை இன்னும் கணக்கிடகூட முடியாத அளவுக்கு மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சியினர்களும், திரையுலகினர்களும் தாராளமாக நிதியளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து ஏராளமான நிவாரண பொருட்கள் புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிக்கு சென்றுள்ள நிலையில் நிவாரண உதவியை பார்வையிட இன்று காலை கமல்ஹாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றுள்ளார்.

திருச்சியில் இருந்து முதல்கட்டமாக தஞ்சை செல்லும் கமல்ஹாசன், அங்கு நிவாரண பணிகளை பார்வையிட்டு அதன்பின்னர் கஜா பாதித்த மற்ற மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளார். முன்னதாக திருச்சியில் கமல்ஹாசனை மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் வரவேற்றனர்.