திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 25 நவம்பர் 2018 (15:44 IST)

அரசுக்கு ஆலோசனை சொல்வதை நடிகர்கள் தவிர்க்க வேண்டும்: துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களூக்கு கோலிவுட் திரையுலகின் நடிகர், நடிகைகளின் நிவாரண உதவிகள் டெல்டா பகுதி மக்களுக்கு கிடைத்த பேருதவி ஆகும். நிவாரண பொருட்களை, பணத்தை வழங்கியது மட்டுமின்றி ஒருசில நடிகர்கள் களத்தில் இறங்கி நேரடியாக மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கமல்ஹாசன் முதல் கஸ்தூரி வரை டெல்டா பகுதி மக்களை நேரில் சந்தித்து வருவதால் அந்த பகுதி மக்களின் சோகம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. அதேசமயம் நடிகர்கள் அரசுக்கு சில கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து கூறிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், 'நடிகர்கள் அரசுக்கு ஆலோசனை சொல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த கருத்தால் நடிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.