வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2019 (20:26 IST)

மத்திய அரசை எதிர்பார்க்காமல் உடனடியாக நிவாரண நிதியை அறிவித்த முதல்வர்!

தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை பெய்ததால் அந்த பகுதியில் பெரும் சேதங்கள் ஏற்பட்டது. இந்த சேத விபரங்களை மத்திய அரசுக்கு அனுப்பி அங்கிருந்து நிதிவரும் என்று எதிர்பார்க்காமல் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.30 கோடியை முதல்கட்ட நிவாரண நிதியாக ஒதுக்கீடு செய்துள்ளார்.
 
மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து முதலமைச்சர் இந்த தொகையை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், மேலும் சேத விவரங்களை உடனடியாக சேகரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை விரைவுபடுத்தவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
இந்த நிதியை வைத்து பகுதியாக சேதமடைந்த 1,225 குடிசை வீடுகளுக்கு தலா ரூ.4,100 மற்றும் முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு தலா ரூ.5,000 வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.