வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 7 ஜூன் 2021 (16:54 IST)

ஞாயிற்றுக் கிழமைகளில் முதலமைச்சரை தொந்தரவு செய்யக்கூடாது… இப்படி ஒரு வழக்கா?

தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலினை ஞாயிற்றுக் கிழமைகளில் தொந்தரவு செய்யக்கூடாது என தொடரப்பட்ட வழக்குக்கு நீதிபதிகள் அபராதம் விதித்துள்ளனர்.

தமிழ்நாட்டு முதல்வர் முக ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்து வருகிறார். சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் விவேகானந்தன் தாக்கல் செய்துள்ள மனுவில் முதலமைச்சரை அவசர கால தேவையில்லாமல் அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் ஞாயிற்றுக் கிழமைகள் தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும் அந்த மனுவில் ‘எப்படி தமிழ்நாட்டு மக்களின் மேல் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதோ அதுபோல அவரின் மேலும் நம் அனைவருக்கும் அக்கறை உள்ளது எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிகாரிகளின் நடவடிக்கைகளில் குறுக்கிட முடியாது எனக் கூறி அபத்தமாக வழக்குப் பதிவு செய்த நபருக்கு 10000 ரூபாய் அபராதம் விதித்தனர்.