திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 6 ஜூலை 2020 (18:31 IST)

பா.வளர்மதிக்காக இறைவனை வேண்டிய தமிழக முதல்வர்!

முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று காலை தகவல் வெளிவந்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பா.வளர்மதி தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பா.வளர்மதி விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திருமதி.பா.வளர்மதி அவர்கள் மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் அவர்களும் விரைவில் பூரண நலம்பெற்று இயல்புநிலை திரும்ப இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அதேபோல் முதல்வர் பழனிசாமி மற்றொரு டுவிட்டில் கூறியபோது, ‘சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆயுதப்படை காவலர் திரு.நாகராஜன் அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்!