செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 மார்ச் 2021 (10:37 IST)

ஆப்பிரிக்க வகை கொரோனா இந்தியாவில் உறுதி! – மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் ஆப்பிரிக்க வீரியமிக்க புதிய கொரோனா இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பல கோடி பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் மற்ற சில நாடுகளில் வீரியமிக்க கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அந்நாடுகளுடனான போக்குவரத்தை இந்தியா நிறுத்தியுள்ளது.

சமீபத்தில் லண்டனில் பரவிய வீரியமிக்க கொரோனா பாதிப்பு இந்தியாவில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் ஆப்பிரிக்க மற்றும் பிரேசிலிலும் வீரியமிக்க புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூரில் ஒருவருக்கு முதன்முறையாக ஆப்பிரிக்கா வகை வீரியமடைந்த கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.